ரெயில்வே துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படு கிறது. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரெயில்வே துறை உலக அளவில் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட துறையாகும். இதில் அதிகாரி தரத்திலான பணியைப் பெறுவதில் இளைஞர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.
அவர்களது ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ரெயில்வே துறையில் கணிசமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படுவது உண்டு.
தற்போது ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் என்ஜினீயர் பிரிவு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜூனியர் என்ஜினீயர் பிரிவில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அன்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட், சீனியர் என்ஜினீயர் பிரிவில் சீனியர் செக்சன் என்ஜினீயர், சீப் டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
நாடு முழுவதும் 2 ஆயிரம் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டல ரெயில்வே மற்றும் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 200-க்கு மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஜூனியர் என்ஜினீயர் பிரிவு பணி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். சீனியர் என்ஜினீயர் பிரிவு விண்ணப்பதாரர்கள் 20 முதல் 34 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1-7-2015 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். இதில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ./ பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், சிறுபான்மையினர், ஊனமுற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கும் 'நெகட்டிவ்' மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 26-7-15
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள் : 22-8-2015 மற்றும் 5-9-2015
இது பற்றிய விரிவான விவரங்களை www.rrb chennai.gov என்ற இணையதள முவரியில் பார்க்கலாம். ஜூன்27-ஜூலை3 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழிலும் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது.
நன்றி - dailythanthi.com
Post a Comment