MILLATHNAGAR EXPRESS MILLATHNAGAR EXPRESS Author
Title: மொபைல் போனில் சிக்னல் இல்லையா?
Author: MILLATHNAGAR EXPRESS
Rating 5 of 5 Des:
செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்...
செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும். சிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம். இதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது. கோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது. அந்த கருவி மற்றும் செயலி நம்மிடம் இருந்தால், அதன் மூலம், செல்போனில் சிக்னல் இல்லாத போதும் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்களோ அந்த நபரும், அந்த கருவியை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாடு யாதெனில், இந்த செயலியை பயன்படுத்தி நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகையில், அந்த குறுஞ்செய்தி முதலில் நம்முடைய செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ள கோடென்னா கருவிக்கு செல்லும். பின்னர் அந்த கருவி, அந்த செய்தியை ரேடியோ சிக்னலாக மாற்றி, அந்த குறிப்பிட்ட நபரின் கருவிக்கு அனுப்பி விடும். இந்த கருவி மற்றும் செயலி முக்கியமாக சுரங்கப் பணியாளர்களுக்கும், சாகச விரும்பிகள், மலையேறுபவர்கள் மற்றும் காடுகளில் பயணிப்பவர்களுக்கும் சிறந்த கருவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...

About Author

Advertisement

Post a Comment

 
Top