MILLATHNAGAR EXPRESS MILLATHNAGAR EXPRESS Author
Title: காலையில் செய்யவேண்டிய பயிற்சிகள்
Author: MILLATHNAGAR EXPRESS
Rating 5 of 5 Des:
பஞ்சபூதக் கூட்டால் ஆகிய மனித உடலில் ரத்தம், வெப்பம், காற்று, உயிர் ஆகிய நான்கும் உடல் முழுவதும் சுழன்று ஓடி இயங்குகின்றன. மூன்று ஓட்டங்கள...

பஞ்சபூதக் கூட்டால் ஆகிய மனித உடலில் ரத்தம், வெப்பம், காற்று, உயிர் ஆகிய நான்கும் உடல் முழுவதும் சுழன்று ஓடி இயங்குகின்றன. மூன்று ஓட்டங்களும் சீராக இயங்க சில எளிய முறைப்பயிற்சிகளை தினமும் வீட்டில் செய்து வந்தால் போதுமானது. அவை என்னவென்று பார்க்கலாம். • தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். • தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். • தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். • பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும். • வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம். • க‌ண்களை வ‌ட்டமாக சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கவு‌ம். இதுபோ‌ல் ஒரு 2 ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம். • கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும். • இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும். • கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது. • முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும். • விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும். • தலைவலி வந்தால் தையலம் தேட வேண்டாம் சிறிது நேரம் தலையை மனதில் நினைத்துக்கொண்டு காலின் பெருவிரலை அழுத்துங்கள் தலைவலி போய்யே போச்சு

About Author

Advertisement

Post a Comment

 
Top