MILLATHNAGAR EXPRESS MILLATHNAGAR EXPRESS Author
Title: நாம் சொல்லிக் கொடுப்பதை கிளிகள் பேசுவதற்கு காணரம் என்ன.? வாங்க அறியலாம்.
Author: MILLATHNAGAR EXPRESS
Rating 5 of 5 Des:
கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம அதன் மூளையில் இருக்கும் ...

கிளிகள் நாம் சொல்வதை திரும்ப சொல்லும்போது இனிமையாக இருக்கும், நாம் சொல்வதைப்போன்றே கிளியால் பேச முடிவதற்கு காரணம அதன் மூளையில் இருக்கும் ‘கோரஸ்’ பகுதியில் உள்ள வெளிவட்டங்களே என ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் ஏழு வகையான கிளிகளின் மூளை திசுக்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டது. ஏனைய பறவைகள் போல் அல்லாது இதன் மூளையின் கோரஸ் பகுதியின் அமைப்பே இதற்கு காரணமாகும். கிளியால் புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முடியும். வேறு எந்த உயிரினத்தாலும் கிளி அளவுக்கு கற்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மூளையின் இந்த வளைய அளவின் மாற்றத்தை தவிர வேறு எதுவும் அதிலிருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. நியூசிலாந்தின் 29 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய கிளி வகையான கே-யிலும் இந்த அமைப்பு உள்ளது என்பது இன்னொரு ருசிகரமான தகவலாகும்

About Author

Advertisement

Post a Comment

 
Top