மதரஸாக்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு..!
மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறியுள்ளது:
முறையான கல்வி யான கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றை கற்பிக்கா மல் மதம்சார்ந்த கல்வியை கற் பிப்பதால் மதரஸாக்களை பள்ளி யாக ஏற்க முடியாது.
நமது அரசியல் சாசனசட்டப்படி முறையான கல்வி குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேலும் இந்து அல்லது கிறிஸ்தவ குழந்தைகள் மதரஸாவில் படிக்க முடியாது. எ
னவே மதரஸா என்பது பள்ளி அல்ல மதம் சார்ந்த கல்வி அமைப்பு என்பது தெளிவாகிறது.
இது தொடர்பாக சிறுபான்மையினர் விவகாரத்துறை தலைமைச் செயலாளர், மாநில பள்ளிக் கல்வித்துறை தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனவே ஜூலை 4-ம் தேதி முதல் மாநிலத்தில் முறையான கல்வி கற்காத குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகள் பள்ளி செல்லாத குழந்தைகளாகவே கருதப்படுவார்கள்.
சிறுபான்மையின குழந்தைகளும் முறையான கல்வி பெற்று மற்றவர்களுடன் இணைந்து முன்னேற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார்.
இதற்கு மகாராஷ்டிர மாநில சிறுபான்மையின தலைவர்களும், எதிர்க்கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment