வி.களத்தூர் ஜூலை04 -
அ.தி.மு.க .தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் தமிழக மக்களுக்கு விலையில்லா ஃபேன்,கிரைண்டர்,மிக்சி ஆகியவை தருவதாக வாக்குறுதி அளித்தது.
அதை நிறைவேற்றும் விதமாக இன்று வி.களத்தூரில் மாலை 5 மணியளவில் தமிழக அரசின் இலவச மிக்சி கிரைண்டர் பேன் ஆகியவை நமது பெரம்பலூர் தொகுதி M.P திரு.மருதை ராஜ்மற்றும் பெரம்பலூர் M.L.A . இளம்பை தமிழ்ச்செல்வன் அவர்கள் வழங்கினார்.
இந்த இலவச மிக்சி கிரைண்டர் பேன் ஆகிவை தற்பொழுது முக்கிய இருபது நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.மீதமுள்ள மிக்ஸி கிரைண்டர் பேன் ஆகிவை வரும் நாளை முதல் நமது ரேஷன் கடைகளில் தருவார்கள் என அறிவிப்பப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றிய குழு தலைவர் ஜெயலட்சுமிகனகராஜ், துணைதலைவர் வேலுசாமி, மற்றும் அதிமுக பிரமுகர் காவியா ரவி, சோடா காரர் இப்ராஹிம்,போஸ்ட் மேன் பிச்சை முஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வி.களத்தூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! -
நாளை முதல் வி.களத்தூர் மற்றும் வண்ணாரம்பூண்டி,இராயப்ப நகர்(கீழச்சேரி)பாரதியார் நகர் (மேலச்சேரி) ஆகிய ரேஷன் கடைகளில் விலையில்லா ஃபேன், மிக்சி, கிரைண்டர் ஆகியவை வார்டு வரியாக வழங்கப்படுகின்றன.
எனவே ஒரிஜினல் ரேஷன் கார்டு ஆதார் அட்டை ஆகியவை எடுத்து கொண்டு வாங்கி செல்லவும்...
Post a Comment