தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்டவை சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களுக்கு அன்றாடம் வந்து செல்லும் இஸ்லாமிய மக்கள் பெரும்பாலானோர் இந்த விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் முஸ்லிம்களின் கட்டாய கடமைகளில் ஒன்றான 5 வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு சென்னை விமான நிலையத்தில் தொழுகை அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறையில் சுமார் 20 பேர் வரை ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது ஒழு செய்வதற்கு தொழுகை அறையின் உள்ளே அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொழுவதற்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழுகை நடத்துவதற்கு இமாம் மற்றும் மோதினார் கிடையாது அவரவர் தொழுகையை நிறைவேற்றி கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் M.M.S. ஜஃபர் சாதிக் நம்மிடம் கூறுகையில்...
சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிறுவன இஸ்லாமிய அலுவலர்கள், விமான நிலைய இஸ்லாமிய வர்த்தகர்கள், விமான நிலையத்திற்கு வந்துசெல்லும் இஸ்லாமிய பயணிகள் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கு. தொழுகை நடத்துவதற்காக விமான நிலையத்தின் கேட் எண் 14 ல் தொழுகை அறை அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே பெண்கள் தொழுவதற்கு தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் தொழுகையை நேற்று மஹ்ரிப் பாங்குடன் துவங்கினோம்.
விமான நிலையத்திற்கு வந்து செல்லும் இஸ்லாமிய பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்பாடு செய்து தந்த அரசிற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம். பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் தொழுகை அறையின் முகப்பு பகுதியில் 'பிரையர் ஹால்' என நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது
Post a Comment