வி.களத்தூர் ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இன்று (3-7-2011) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்ச்சி பள்ளியின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நோன்பு கஞ்சி உட்பட பல்வேறு உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிரிந்த இந்த இப்தார் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் நோன்பு திறந்த பிறகு பள்ளியிலேயே மக்ரிப் தொழுகை நிறைவேற்றினார்கள்.
Post a Comment